பகவான் ஸ்ரீ ரமணர்
பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.
விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.
உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது.வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல.உண்மையில்மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும்துறப்பதே சந்நியாசமாகும்.உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால்,உலகையே மூழ்கடிக்கிறான். துறவென்பது உறவைச்சுருக்கிக் கொள்வதல்ல. உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.
மரணத்திற்குபிறகுஎன்னஎன்பதற்குவிடைதேடவேண்டாம்.நிகழ்காலத்தில்வாழ்வோம்.எதிர்காலத்தைப்பற்றிக்கவலைப்படவேண்டாம்.எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.
மகிழ்ச்சி என்பதுமனிதனுக்குள்ளேயேஇருப்பதுதானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.
ஸ்ரீ ரமணர்.
No comments:
Post a Comment