Saturday, April 16, 2011

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு


     வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு “இலட்சியம்” இல்லாவிட்டால் மனிதன்,கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தர் கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார்.மகத்தான செயல்கள் யாவும் முதலில் “முடியும்” என்ற நம்பிக்கையில் தொடங்கப் பட்டவைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ணபரமாத்மா கூறியதை நினைவில் கொள்.

         உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள்,உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சாதனைகள், அதனை அடைவதற்கு நீ செய்யும் முயற்சிகள், உனது ஆழமான எண்ணத்தின் தூண்டுகோல்கள், உன்னவழிநடத்தும்மனத்தின்உற்சாகங்கள்,உன்வாழ்வில்ஒளியேற்றும்உன்னதக்குறிக்கோள்கள்,உனக்கு என்றும் மகுடம் சூட்டி மகிழும் மகோன்னத மனத்தின் இலட்சியங்கள்தான் உன்னை வழிகாட்டி அழைத்துச் செல்லும் வாழ்க்கையின் நங்கூரங்கள்.

“நெப்போலியன் ஹில்” கூறியதைப் போன்று நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை நமது மனதில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கான முயற்சியை உண்மையாகவே ஒரு மனதோடு செயலாக்க வேண்டும்.ஒவ்வொன்றும் நாம் நினைத்தபடி நம்மை வந்தடைவதை நாம் காணலாம். நான் எதையும் “சாதிக்கும் ஆற்றல் பெற்றவன்”என்று தினசரி தன்னம்பிக்கையுடன் சொல்லிப்பார். தன்னம்பிக்கையுடன் சொல்லும் போது எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிப்போகும். “நம்மால் முடியும்” என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை நீ வெற்றிகரமாக சாதித்துவிடலாம்.

மகனே, ஒன்றை மட்டும் நினைவில் கொள். “முடியும்” என்ற நம்பிக்கையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்கி உற்சாகத்துடன் செய்தால் வெற்றி உறுதி உனக்கு.முயன்றால் முன்னேறலாம். வாழ்க்கையில் நீ எதுவாக வேண்டும் என நினைக்கிறாய்? முதலில் உள்ளத்தில் அந்த எண்ணம் கருக்கொண்டு உருப்பெறச் செய். வாழ்க்கையில் எதற்காகவும் அஞ்சாதே. எதற்காகவும் கலங்காதே. எந்தச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அதற்கான ஆற்றல் உனக்கு உண்டு. அதனை உணர்ந்து செயல்படுத்து. ஆசைக்கு இடம் கொடுக்காதே. அறிவுக்கு இடம் கொடுத்து ஆலயவாசலைத் திறந்திடு.நான் நன்றாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் பெரிதாகச் சாதிக்கப் போகிறேன் என்று எப்போதும் எண்ணியபடி இரு. இப்படி இருந்தால் யானை பலம் உனக்கு. ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் நீ எண்ணியபடி உயர்ந்த இலட்சியத்தை அடைந்துவிடுவாய். துணிச்சலான ஆரம்பம்தான் உன்னைத் தூண்டிவிடும் கிரியா ஊக்கி. “துணிவில்லாதவனின் வாணிபமும், பணிவில்லாதவனின் ஊழியமும் பயன்படாது”என்பதை மனதிலிருத்தி துணிவோடும், பணிவோடும் உன் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வை. உன்னை நிச்சயம் உலகம் பார்க்கும். “பயம் சாதிக்காததை நயம் சாதிக்கும்” என்பதை மறந்து விடாதே.யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு “நம்பிக்கை” தான் எல்லா செயலுக்கும் அடிப்படை. “கெடு” நிர்ணயிக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்குள் இதனை நாம் அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் ஏற்பட்டால் தான் அது உன்னைப்பிடித்து உந்தித்தள்ளும். உன்னுடைய லட்சியத்தை நீ எட்டிப்பிடித்திடுவாய். “லட்சியம்” மட்டும் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.

மகனே,வாழத்துடிப்பவர்கள்தான்வாழமுடியும்.வகையறிந்து வாழ்கிறவர்கள் தான் நீண்ட நாள் வாழ முடியும். “வாழ்வோம்” வாழ்ந்தே தீருவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டு. உலகம் உன்னை வியந்து

No comments:

Post a Comment