இளைஞனே உன்னால் முடியும்
நம்மால் சாதிக்க முடியும். முடியாது என்பது முட்டாள்களின் அகராதி. முடியும் என்பதுதான் அறிஞர்களின் அகராதி என்கிறார் சாக்ரடீஸ்.
மனிதனால் முடியாதது எதுவும் இல்லை. சின்ன சின்ன தோல்விகள் தான் வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியை கண்டு நடுங்கினால் வெற்றியை ருசிக்கமுடியாது.எடுத்த எடுப்பிலே நாம் வெற்றியை பெற்று விட முடியாது. ஒருவேளை நாம் வெற்றி பெற்றிருந்தாலும் அது சரியான வெற்றியாக இருக்காது.
ஒரு மனிதனுக்கு குறிக்கோள் என்பது மிக முக்கியமானது.
குறிக்கோள் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டால்தான் நாம் அடைவதை விரைவில் அடைய முடியும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். நாம் செய்யும் முயற்சி தான் நம்மை உயரச்செய்யும்.முயற்சி இல்லாமல் எதையும் அவ்வளவு எளிதாக செய்ய முடியாது. தெய்வத் தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலி தரும் என்ற குறளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவனுடைய தாழ்வு மனப்பான்மைஅவனைஅழித்துவிடும்,எண்ணங்களை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிஞர் வால் டோர் கூறியுள்ளார்.
ஒருவனுடைய தன்னம்பிக்கை தான் அவனை உயரச்செய்யும். தன்னால் முடியும் என்பதை அவன் நம்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னால் முடியும் என்னால் முடியும் என்று சொல்லி சொல்லி மனதிற் குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானால் அதைப்பற்றிய திட்டமிடல் முதலிலேயே நமக்கு வந்துவிட வேண்டும்.
எதையும் திட்டமிட்டு செய்ய பழகி கொள்ள வேண்டும். அப்போதுதான் செய்யும் காரியத்தில் முழுமையான வெற்றியை நாம் பெறமுடியும்.
தாமஸ் ஆல்வா எடிசன்,மார்க்கோனி போன்ற அறிஞர்கள் எடுத்த எடுப்பிலே தங்கள் கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றுவிடவில்லை. அவர்கள் வெற்றிக்கு பின்னால் கடுமையான உழைப்பு, முயற்சி இருந்தது.
பறவையை பாருங்கள், தன் குஞ்சுக்கு கொஞ்ச கொஞ்சமாக தன்னம் பிக்கையை ஊட்டி பறக்க செய்கிறது.
வெற்றி என்ற பாதையை அடையும் முன் சறுக்கல்கள், தோல்விகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும்,தடை கற்களை அப்புறப்படுத்தி ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தால் வெற்றி என்ற பாதையை நம்மால் அடைய முடியும்.
No comments:
Post a Comment