VICTORY- வெற்றிக்கான விளக்கம்!
V-VISION
அதாவது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி தினந்தோறும், நாம் அதைச் செய்யும் போது நமக்குள்ளே தன்னம்பிக்கை வளரும்.
I-INVOLVEMENT
அந்த நிலையை அடைய நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். அதற்கு நம்முடைய ஆர்வமும், ஊக்கமும் அவசியம்.
C-CONFIDENCE
இடையிடையே எவ்வளவு தடைகள் வந்தாலும், நாம் மனம் தளராமல் இருத்தல் அவசியம். சற்று மனம் தளர்ந்தாலும் அது தோல்வி தான்.
T-TROUBLESHOOTING
ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை வந்தால் ‘ஐயோ பிரச்சினை வந்துவிட்டதே’ என்று எண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைதான் பெரிதாகும். அதை விடுத்து தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டும். செய்ய ஆரம்பித்தால் பிரச்சினை சிறியதாகி விடும். பின்பு முழுமையாக தீர்ந்தே போகும்.
O- OPTIMISTIC THOUGHTS
இது ஒவ்வொரு நேரத்திலும் நம்மோடு இருக்க வேண்டும். ‘ நம்மால் முடியும், நாம் செய்வோம்’ என்ற எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
R-REVISING
Error is Human, Forgive is Divine என்று சொல்வார்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். நம் முயற்சியில் சிறு சிறு தவறுகள் நேர்ந்து விட்டால், அதை பெரிதாக்காமல், தவிர்த்து அடுத்த முறை மீண்டும் அப்பிழை நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Y- YA YOU HAVE WON IT!
இத்தனையும் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால், நிச்சயம் நாம் வெற்றி என்னும் கோபுரத்தில் நின்று கொண்டிருப்பதை உணரலாம். எந்த ஒரு வேலையையும், சிறிய வேலையாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொன்றாக செய்து முடிக்கும் போது, இறுதியில் அந்த பெரிய வேலை செய்து முடிக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி.
No comments:
Post a Comment